யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

PHOTO 2021 01 21 15 36 24 யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், சட்டத்தரணி சுகாஸ், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

6f1b94a7 f49b 414e a333 a4f154d239b7 யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

இங்கு கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.