யாழில் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் – 8ம் நாளை எட்டியது

இன்றைய தினம் எட்டாவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நல்லூர் மண்ணிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது பல்வேறுபட்ட அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சிவில் சமூகத்தினர் மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறவினர்கள் என பலரும் வந்து போராட்டத்திற்கு வலு சேர்த்த வண்ணம் உள்ளனர்.

குறித்த சுழற்சி முறையிலான போராட்டம், சிறீலங்கா அரசாங்கத்தை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பார படுத்தும்படி அழுத்தம் கொடுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும்.

உங்களுடைய நேரத்தில் சிறிது நேரத்தை ஆவது போராட்டத்திற்கு  ஒதுக்குங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவர் எஸ் தவபாலன்  கோரிக்கை விடுத்துள்ளார்.WhatsApp Image 2021 03 07 at 6.34.34 PM யாழில் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் - 8ம் நாளை எட்டியது

காலத்தின் தேவை அறிந்து அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு வலு சேர்த்து சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

WhatsApp Image 2021 03 07 at 6.34.27 PM யாழில் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் - 8ம் நாளை எட்டியது

சிறீலங்கா அரசாங்கத்தை நம்பி பயன் இல்லை. சர்வதேசமே எமக்கான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பலப்படுத்துவதன் ஊடாகவே அது சாத்தியமாகும் எனவே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவரும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க போராட்டத்தில் இணைய வேண்டும் என எட்டாவது நாள் சுழற்சி முறையில் நடைபெறும் போராட்டத்தில் இணைந்து கொண்டு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர். நாளைய தினம் மகளிர் தினத்தை ஒட்டி போராட்டம் மேலும் வலுவாக நடைபெறும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்தோடு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான  விக்னேஸ்வரன்.

சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பதப்படுத்த வேண்டும் என்பதனை தான் வலியுறுத்துவதாகவும் அதற்கான அழுத்தத்தினை மக்கள் ஒழுங்கு செய்யும் சிறு சிறு போராட்டங்கள் ஊடாக அழுத்தத்தினை பிரயோகிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் இந்தப் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று சர்வதேச விசாரணையை சர்வதேச அரங்கில் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.