மொரவெவ பிரதேச சபையும் ‘மொட்டு’ வசம் – திருமலையில் தொடரும் பின்னடைவு

திருகோணமலை மொரவெவ பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை சேர்ந்த ஜகத் குமார வேரகம அதிக வாக்குகள் பெற்று தகைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மொரவெவ பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 07 ஆசனங்கள் கிடைத்தன.எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியை அமைத்ததோடு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்கட்சியாக செயற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020 டிசம்பர் 31ம் திகதி மொரவெவ பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. அதனுடன் ஆதரவு கட்சிகளுடன் இணைந்து பிரதேச சபையில் அதிகாரத்தை பொதுஜன முன்னணி கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஓர் உறுப்பினர் ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 7 உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவாக வாக்களித்தனர்.