மேற்குலகத்தின் தடைகளை தனக்கு சாதகமாக்கும் ஐக்கிய அரபு இராட்சியம்

மேற்குலக நாடுகள் ரஸ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தடைகளை விதித்தபோதும் அதனை தனக்கு சதகமாக்கி அதிக தங்கத்தை ரஸ்யாவில் இருந்து ஐக்கிய அரபு இராட்சியம் கொள்வனவு செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்த தரவுகளின் அடிப்படையில் கடந்த வருடம் ஐக்கிய அரபு இராட்சியம் 96.4 தொன் தங்கத்தை ரஸ்யாவில் இருந்து கொள்வனவு செய்துள்ளது. இரு ரஸ்யாவின் ஒரு ஆண்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும். ஐக்கிய அரபு இராட்சியத்தின் தங்கத்தின் இறக்குமதி 15 விகிதத்தால் அதிகரித்துள்ளதுடன், ரஸ்யாவின் மிகப்பெரும் கொள்வனவு நாடாகவும் அது மாற்றம் பெற்றுள்ளது.

போருக்கு முன்னர் பிரித்தானியாவே ரஸ்யாவில் இருந்து அதிக தங்கத்தை வாங்கிவந்தது. ஆனால் தடைகளின் பின்னர் பிரித்தானியா, சுவிற்சலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதனை நிறுத்தியுள்ளன.

ஐக்கிய அரபு இராட்சியத்திற்கு அடுத்ததாக துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஸ்யாவில் இருந்து அதிக தங்கத்தை கொள்வனவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளுக்கே ரஸ்யாவின் 99.8 விகித ஏற்றுமதிகள் செல்கின்றன.