முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த போராளிகள், பொது மக்களை நினைவு கூர்ந்து நினைவு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இன்று நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றியவர்கள் பொலிஸ், இராணுவத்தினரின் எதிர்ப்பை மீறி கலந்து கொண்ட காரணத்தினால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை செம்மணியில் ஆரம்பமாகிய போது, பொலிசார், இராணுவத்தினர் நிகழ்வை தடுக்க முற்பட்டனர்.

அங்கிருந்து அனைவரையும் வெளியேறும்படி பணித்தனர். இருந்தும் எதிர்ப்பையும் மீறி நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் சமூக இடைவெளி பேணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தும் எதிர்ப்பை மீறி நிகழ்வு நடத்தப்பட்டமைக்காக நிகழ்வில் பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.