முறையான விசாரணையின்றி பணியாளர் தடுத்துவப்பு;சுவிஸ் அரசு கண்டனம்

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவராலய அதிகாரி கானியா பிரன்சிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமையினால், முறையான விசாரணை இடம்பெறாதிருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இலங்கைக்கு எதிரான அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கானியா பிரன்சிஸான தமது ஊழியரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அந்த விசாரணை இடம்பெற வேண்டும் எனவும் சுவிஸ் அரசாங்கம் கோரியுள்ளது.

கானியா மோசமான சுகாதார நிலையில் காணப்படும் போது புலனாய்வுப் பிரிவு அவரிடம் 30 மணி நேரமாக விசாரணை முன்னெடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன்,  விசாரணைகள் நிறைவடைய முன்னர் அரச தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் சுவிஸ் அரசாங்கம் இலங்கையிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று, விசாரணை முன்னெடுக்கப்படும் முறைமைகள் தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் இது தொடர்பில் சுவிஸ் தூதுவர் ஜனாதிபதியிக்கு அறிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது