முத்து நகர் மக்கள் காணி இந்தியாவுக்கு விற்பனை – இம்ரான் எம்.பி நேரில் ஆராய்வு

IMG 20240525 WA0049 முத்து நகர் மக்கள் காணி இந்தியாவுக்கு விற்பனை - இம்ரான் எம்.பி நேரில் ஆராய்வுஇந்தியாவின் சில தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நோக்குடன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் பல தசாப்தங்களாக பொதுமக்கள் குடியிருந்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் குடியிருப்பு காணிகள் மற்றும் விவசாய காணிகளில் இருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்தத்தை அடுத்து அங்கு எழுந்துள்ள பதற்ற நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் அப்பகுதிக்கு இன்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சென்று அப்பிரதேச மக்களுடன் கலந்தியரையடலில் ஈடுபட்டார்.

இதன்போது இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் நௌபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.