சஜித் – பொன்சேகா சமரச முயற்சி தோல்வி

sajth sarath சஜித் - பொன்சேகா சமரச முயற்சி தோல்விஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகாவுக்கும் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பதவிக்கு சரத் பொன்சேகா போட்டியிட வேட்புமனு கோரியது தொடர்பாகவே இவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அக்கட்சி வழங்கியது.

அதன்படி திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. ஆனால், சரத் பொன்சேகா தனக்கு ஜனாதிபதி வேட்புமனுவைக் கோரியதால் பேச்சினை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.