சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்

சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம்
தெரிவித்து, சங்கிலியன் பூங்காவின் முன்பாக முதலாவது பிரசாரத்தை சிவாஜிலிங்கம் ஆரம்பித்தார்  சிவாஜிலிங்கம்.

வடக்கு கிழக்கு தவிர, மலையகம் கொழும்பிலும் பிரசாரத்தை நடத்துவோம்
என்றும் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் தம்மை
ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதுவரையான ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்கள் அரசியல்
தீர்வு என்ற அணிலை மரத்தில் ஏறவிட்டவர்களாக இருக்கின்றார்கள் எனக்கூறிய
அவர், இந்த தேர்தலிலும் மரத்தில் அணிலை ஏறவிட்ட நாய்களாக இருக்கப்
போகிறோமா இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது உரிமையை இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் சொல்லப் போகின்றோமா
என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும்படி சிவாஜிலிங்கத்திடம்
ரெலோ ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நேற்று யாழில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்
போது,

அடுத்த மூன்று மாதங்களிற்கு ரெலோவின் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகி,
பெயரளவிற்கு மட்டுமே கட்சியில் இருக்கின்றேன். இதற்கிடையில் கட்சி தனது
விசாரணையை நடத்தி முடிக்கட்டும்.கட்சியின் நடவடிக்கையைப் பொறுத்தே கட்சியிலிருந்து நிரந்தரமாக விலகுவதா என்ற முடிவை என அறிவித்துள்ளார்.

சில தினங்களின் முன்னர் ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவுகளிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அவர்மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 12ஆம் திகதி ரெலோவின் யாழ். மாவட்ட குழுக் கூட்டம் நடந்தது. அதில்
கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், நான் போட்டியிட்டது சரியென்று தான்
கூறினார்கள். விந்தன் கனகரட்ணம் மட்டும் தான் எதிர்நிலைப்பாட்டை எடுத்தார்.
ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் அடுத்த நாள்(13) நடைபெற்றது. அதில்
13பேர் கலந்து கொண்டிருந்தனர். அதில் ஜனாதிபதி தேர்தல் குறித்தும், நான்
போட்டியிடுவது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

ஆனால் இதுவரை ரெலோவிடமிருந்து எனக்கு எந்த விளக்கம் கோரல்
கடிதங்களும் அனுப்பி வைக்கப்படவில்லை. ஊடகங்கள் வாயிலாகத்தான் என்னிடம்
விளக்கம் கோரப்பட்டதாக அறிந்தேன்.

சிவாஜிலிங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக, ஒரு வாரத்திற்குள்
விளக்கமளிக்கும்படியும், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும்படியும் ஒரு
தீர்மானத்தை தலைமைக்குழு எடுத்துள்ளது.

அதற்கு எனது பதில்தான், சங்கிலி மன்னின் சிலைக்கு முன்பாக எனது தேர்தல்
பிரசாரம் ஆரம்பித்தது. என்னுடைய பிரசார துண்டுப் பிரசாரத்தை வழங்கினேன்.
என்னிடம் விடக்கம் கோருவதென்ற விடயத்தை எப்படி ஊடகங்கள் வழியாக
அறிந்து கொண்டேனோ, அதேபோல எனது நிலைப்பாட்டையும் ஊடகங்கள் வழியாக
தெரிவித்துள்ளேன்.நான் தேர்தலிலிருந்து விலக மாட்டேன் எனது பிரச்சாரங்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.