முதன் முதலாக வன விலங்கு ஒன்றிற்கு கொரோனா தொற்று

வன விலங்கு ஒன்றிடம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

‘மிங்க்’ எனப்படும் ஒரு வகை எலி போன்ற உயிரினத்தை அதன் ரோமத்துக்காக பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.

அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மிங்க் விலங்குகளுக்குத் தொற்று ஏற்பட்ட பண்ணையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் வசிக்கும் மிங்க் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க விவசாயத்துறை கூறியுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், ரோமங்களுக்காக பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவந்த பல லட்சக்கணக்கான மிங்குகள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் கொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.