மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு – ஹஸ்பர் ஏ ஹலீம்_

அண்மையில் எரிபொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து ஆழ் கடல் மீனவர்கள் உட்பட இயந்திர படகு மூலமான மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்ணெண்ணெய் விலை ஏற்றம் காரணமாக இவர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில் கரையோர பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரமாக மீனவத் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பல்வேறு நஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி,பட்டினமும் சூழலும்,கிண்ணியா,மூதூர் போன்ற பிரதேச செயலகப் பகுதிகளை உள்ளடக்கிய கரையோர மக்கள் பெரும்பாலும் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மிக நீண்ட தூரம் சென்று மீன்களை பிடித்து வந்த போதிலும் சில வேலை வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.மண்ணெண்ணெய் வாங்கும் பணம் கூட கிடைக்காமை போகின்றது.Trinco fish 1 மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு - ஹஸ்பர் ஏ ஹலீம்_நாட்டின் மீன் பிடித் துறை மூலமாகவும் மக்களின் ஜீவனோபாயம் முக்கிய பங்கு வகிக்கிறது இத்துறை மூலமாக வளர்ச்சியடைந்த மக்களாக மாற்ற மீன் பிடி துறை முகங்களை அமைத்து சீரான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அத்திதவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் தினமும் மீன் பிடி துறை மூலமான வருமானம் போதியள்மையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்கான செலவு என கல்வி நடவடிக்கைகளை பாதித்து வருகின்றது. இது தொடர்பில் கிண்ணியா மீனவர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார் “கடல் தொழிலுக்கு சென்று மீன்களை பிடித்த போதிலும் எண்ணெய் விலை அதிகமாக உள்ளதால் நட்டம் ஏற்படுகிறது அரசாங்கம் மானிய திட்டம் ஊடாக மண்ணெண்ணெயை பெற்றுத் தர வேண்டும் இல்லாது போனால் எங்களது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக் கூடும் ” என்றார்.

Trinco fish1 மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு - ஹஸ்பர் ஏ ஹலீம்_கிழக்கு மாகாணம் உட்பட  வடகிழக்கு கரையோர மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மீனவர்களுக்காக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் அவர்களுக்கு பல பாதகங்களை ஏற்படுத்தும் இவ்வாறு போனால் மீனவத் தொழிலை செய்ய முடியாது கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம். அரசாங்கம் மீனவர்களுக்கான சலுகைகளை வழங்குவதுடன் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் அப்போது தான் மீனவ சமூகங்களுக்கு விடிவு கிடைக்கும்.

“மீனவத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு தாங்கள் வாழவேண்டுமாக இருந்தால் மண்ணெண்ணெய் விலையை குறைத்து அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் வெள்ள கால நிலையால் கடல் நீர் கலங்களாக காணப்படுவதால் மீன்கள் படுவதும் குறைவு” என கடல் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.

Trinco fish2 மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு - ஹஸ்பர் ஏ ஹலீம்_மீன் பிடி துறையை விருத்தி செய்ய அவர்களுடைய பல்தரப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் .மீன் பிடி துறை முகங்களை அமைத்து கடல் தொழிலாளர்களின் சங்கங்களை வலுப்படுத்தி விசேட திட்டம் ஊடாக உரிய அமைச்சு கவனம் எடுக்க வேண்டும். விசேடமாக நாட்டில் வடகிழக்கு மீனவர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு அவர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் தற்போதைய நிலையில் அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வு அவர்களை மேலும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளதுடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளான அஸ்வசும கூட பலருக்கு இல்லாமல் போனதால் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். மின்சாரம் நீர் கட்டணம் அதிக அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கான புதிய பொறிமுறை ஊடாக சிறந்த வாழ்வாதார திட்டத்தை ஏற்படுத்துவது உரியவர்களின் கடமையல்லவா.

மீனவர்களது பிரச்சினைகள் ஒரு போதும் தீர்க்கப்படுவதில்லை இழுவை படகு பிரச்சினை இந்திய இலங்கை கடல் எல்லை பரப்பு பிரச்சினை சுருக்கு வலை பிரச்சினை என பல பிரச்சினைகள் காணப்படுகிறது வீதிமறியல் போராட்டங்களை மீனவர்கள் அவ்வப்போது முன்னெடுத்த போதிலும் தீர்வுகள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் அங்கலாய்க்கின்றனர்.

மீன்பிடி துறையை அதிகரிப்பதனால் நாட்டின் அந்நியச் செலவாணிக்கு பாரிய பங்கு வகிக்கும் டின் மீன் ஏற்றுமதி ,கருவாடு உற்பத்தி போன்றவற்றால் பல சாதகமான திட்டம் ஊடாக பல நன்மைகளை பெற உற்பத்திகளை அதிகரிக்க துறைசார் பயிற்சிகள் மூலமாக பல நன்மைகளை அடைந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர முயற்சிக்கலாம்.