பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும் – மட்டு.நகரான்

வடகிழக்கு இணைந்த தமிழர்களின் ஆட்சி அதிகாரம்,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டை இன்று உள்ள தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் சக்திகள் மனதில் கொண்டிருக்கின்றது என்றால் கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு அந்த சக்திகள் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும்.

gajen mailaththamadu பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும் - மட்டு.நகரான்கிழக்கு மாகாணத்தினை தாரைவார்த்துவிட்டு அல்லது கிழக்கு மாகாணத்தினை கவனத்தில் கொள்ளாது தமிழ் தேசியம் என்ற ஒன்றை முன்நகர்த்த முன்னெடுக்கும் முயற்சிகள் என்பது கானல் நீர் என்பதை சர்வதேசத்திலும் ஈழத்திலும் தமிழ் தேசியத்தின்பால் செயற்படுவோர் சிந்திக்கவேண்டும்.

இன்று கிழக்கு மாகாணம் மிகவும் ஆபத்தான நெருக்கடியை சுமந்துகொண்டிருக்கின்றது.ஆனால் அந்த ஆபத்தினை உணராதவர்கள் போன்று வெறுமனே பதவியென்ற வெற்றுக்கோசத்தினை செலுத்திக்கொண்டிருப்பதுடன் அந்த பதவிக்காக புலம்பெயர் தேசத்திலும் இங்கும் முன்னெடுக்கும் செயற்பாடுகளை கொஞ்சமாவது கிழக்கினை பாதுகாப்பதிலும் செலுத்தவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நாங்கள் தொடர்ச்சியாக கிழக்கு தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்,கிழக்கில் தமிழர்களின் பலத்தை காட்டவேண்டும்,இருப்பை தக்கவைக்கவேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுப்பதனை சிலர் பிரதேசவாதமாக கருதக்கூடும்.நாங்கள் வடகிழக்கு தாயகத்தினை தமிழர்களின் தாயகமாக நேசிக்கும் காரணத்தினால்தான் கிழக்கினை பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்துவருகின்றோம்.

இன்று கிழக்கில் பல்வேறு வழிகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது சத்திமில்லாமல் கிழக்கில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கிவருகின்றது.கிழக்கில் தமிழர்களுக்குள் மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில் சத்தமில்லாமல் கிழக்கின் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

107861842 protest batti 02 பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும் - மட்டு.நகரான்இன்று கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான விடயங்கள் பல தற்போது நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலிருந்து அதிகரித்துவரும் புலம்பெயர்வு,தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகள்,திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புகள்,பாதுகாப்பு தரப்பினரின் அடாவடிகள் என்று கிழக்கு மாகாணம் இன்று பாரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளது.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தினை குறிவைத்து தொடர்ச்சியான செயற்பாடுகள் பேரினவாத சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேநேரம் கிழக்கு மாகாணத்திலிருந்து அண்மைக்கால நடைபெறும் வெளிநாடுகளுக்கு செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக கிழக்கில் தமிழர்களின் இருப்பில் பாரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அண்மையில் மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று நடாத்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான செயலமர்வின்போது கிழக்கு மாகாணத்திலிருந்து மாதாந்தம் 2500க்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்துசெல்வதாகவும் இவர்களில் சுமார் 2200பேர் தமிழர்களாக இருப்பதாகவும் அவர்கள் குடும்பங்களுடன் புலம்பெயர்ந்து செல்லும் நிலைமை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலைமையினை யாரும் சாதாரணமாக கடந்துசென்றுவிடமுடியாது.

கிழக்கில் இன்று மூன்று மாவட்டங்களிலும் தமிழர்கள் தமது இருப்பினை தக்கவைப்பதற்காக போராடவேண்டிய நிலையிருக்கின்றது.இன்று மட்டக்களப்பு மட்டுமே தப்பிப்பிழைத்துவரும் நிலையில் அண்மைக்காலமாக இடம்பெறும் புலம்பெயர்நாடுகளுக்கான வெளியேற்றம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தும்.ஏற்கனவே கிழக்கில் தமிழர்களி; பிறப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படும்வேளையில் கிழக்கிலிருந்து தமிழர்களின் வெளியேற்றும் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தும்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையிலான ஆக்கிரமிப்புகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் தமக்கான கோரிக்கையினை முன்வைத்து போராடமுடியாத சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது .கிழக்கு மாகாண ஆளுனராகயிருக்கும் செந்தில் தொண்டமான் மூலமும் கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்ககப்படுகின்றன. அதற்கான செயற்பாடுகளே கடந்த கறுப்பு சுதந்திர தினத்தில் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டன.

trinco land 1 பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும் - மட்டு.நகரான்இதேபோன்று பொலநறுடை மாவட்டத்தில் உள்ள தெகியத்தன்கண்டிய நகரை மட்டக்களப்பு நருடன் இணைந்து அபிவிருத்திசெய்தல் என்ற போர்ரவையில் மட்டக்களப்பில் பாரிய இனமாற்றசெயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.14வருட கிழக்கின் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் கிழக்கு மாகாண ஆளுனரைக்கொண்டு இந்த திட்டம் உருவாகிவருகின்றது.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகள் அனைத்தையும் சிங்கள மயப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்கள் 148 நாட்களாகவும் தமது மேய்ச்சல் தரை காணியை மீட்டுத்தருமாறு போராடிவரும் நிலையில் அவர்களுக்கான தீர்வினை வழங்கமுடியாது அபிவிருத்தி என்ற போர்வையில் அக்காணிகளிலும் சிங்கள மக்களை குடியேற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களின் பரம்பலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் இதுவரையில் எந்த தமிழ் தேசிய சக்திகளும் வாய்திறக்கவில்லை.

ஆனால் தமிழ் தேசியத்தின் பேரில் தமது வயிறுகளை வளர்க்கும் சில சிவில் அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பில் அறிந்திருக்கின்றபோதிலும் இதனைவைத்து தமது பக்கட்டுகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்துவருகின்றன.

இவ்வாறான நிலையில் அண்மையில் நடைபெற்ற ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் .இராஜாங்கள அமைச்சர் வியாழேந்திரன் தங்களால் இனவாதிகளுடன் மோதமுடியாதநிலையேற்பட்டுள்ளதாகவும் தங்களால் நீதிமன்ற கட்டளையினை கூட நிறைவேற்றமுடியாத நிலையுள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.அரசாங்கத்தின் வாலைப்பிடித்துக்கொண்டு தமது பொக்கட்டுகளை நிரப்பியவர்களுக்கு தற்போதுதான் சிங்கள இனவாதிகள் முகம் தெரிந்துள்ளது என்று காட்டமுனைவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.எனினும் நீதிமன்ற கட்டளையினை சிங்களவர்களுக்கு நிறைவேற்றமுடியாத நிலையிலேயே இலங்கையின் சட்டத்துறையுள்ளது என்பதை இங்கு காணமுடியும்.

இவ்வாறு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறு வகையான அடக்குமுறைகளை கண்டுகொள்ளாத நிலையில் தங்களது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கினை நிலை நிறுத்தும் வகையிலேயே தமிழ் தேசிய அரசியல்இருந்துவருகின்றது. குறிப்பாக இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிலைமையானது எதிர்காலத்தில் கிழக்கில் தமிழர்களின் அரசியலில் பாரிய சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தப்போகின்றது என்பது மட்டுமே உண்மையான நிலையிலிருக்கின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியைப் பொறுத்த வரையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையிமையினை இன்று காணமுடியவில்லை.

ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தாலும் தந்திரத்தின் மூலம் இலங்கை தமிழரசுக்கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் சிதைவடையச்செய்துள்ளதுடன் அவர்கள்மீது தமிழ் மக்களின் உணர்வினையும் சிதைக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையில் எதிர்காலத்தில் அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்துசெயற்படுவதன் மூலமே கிழக்கில் தமிழர்களின் இருப்பினை தக்கவைக்கமுடியும். தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அனைவரும் ஒரே நோக்கத்திற்காகவே போராடத் தொடங்கியிருந்தனர்.

2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கடந்தகால செயற்பாடுகளை, தவறுகளை மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு வந்ததன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை உடைத்து இன்று சின்னாபின்னமாகியுள்ளதானது வாக்கு அரசியல் மட்டும் அல்ல தமிழர்களின் உரிமையும் என்பதை அனைவரும் உணர்ந்துசெயற்படவேண்டும்.

இன்று கிழக்கில் உருவாகியுள்ள நிலைமையினை எதிர்கொள்வதற்கு பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும்.அதற்காக அனைவரும் இணைந்துசெயற்படமுன்வரவேண்டும்.