மியான்மரில் நடக்கும் மக்கள் போராட்டத்திற்கு துணை நிற்போம் – அமெரிக்கா

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடந்தும் போராட்டத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “மியான்மரில் அவர்கள் தேந்தெடுத்த அரசுக்காக மக்கள் போராட்டம் நடத்துக்கின்றன. அமைதியாக போராடும் மியானமா் மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம். மக்கள் பொது இடங்களில் கூட கூடாது என்று  மியானமா் இராணுவம் அறிவித்துள்ளதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு பெரிய போராட்டத்தில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

எங்களுக்கு இராணுவ ஆட்சி வேண்டாம், எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து முழுக்கமிட்டனர். இப்போராட்டத்தில் சிறுவர், சிறுமியரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடந்தும் போராட்டத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அறிவித்துள்ளார்.