மாலி அதிபர், பிரதமரை உடனே விடுதலை செய்ய ஐ.நா. வலியுறுத்தல்

மாலி நாட்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவப் புரட்சி  ஏற்படுத்தப்பட்டது. இராணுவக் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனேயோ குட்டரஸ், செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா.உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் அதிபர், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.