மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவது முட்டாள்த்தனம் – பொன்சேகா

நாட்டில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசின் அசமந்தப் போக்கே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டக் காரணம். அத்துடன் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அரசு அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை.

எனினும்,கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், அரசின் இயலாமை காரணமாக அதனை கட்டுப்படுத்தமுடியாது.

மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம். மாகாண சபைக்கு புதிய முகங்களையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.