மருத்துவத்துறை பரீட்சையில் சித்தியடைந்த செயற்கை நுண்ணறிவு

ரஸ்யாவில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கணணி மருத்துவக்கல்லூரியில் ஆறுவருட கற்கைநெறியினை பூர்த்திசெய்யும் மாணவர்கள் எழுதும் பரீட்சையில் பங்குபற்றி சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஸ்யாவின் சேர்பாங் எனப்படும் நிறுவனம் தயாரித்த கிகாசற் நியூட்றல் நெற்வேர்க் எனப்படும் செயற்கை நுண்ணறிவே 100 வினாக்கள் கொண்ட பரீட்சையில் 82 விகித மதிப்பெண்கள் பெற்று சித்தியடைந்துள்ளது என ரஸ்ய ஊடகம் கடந்த செவ்வாய்க்கிழமை(13) தெரிவித்துள்ளது.

சத்திரசிகிச்சை, மகப்பேற்றியல் மற்றும் பொதுமருத்துவம் ஆகிய துறைகள் தொடர்பில் ஏற்படும் அசாதாரணமான நிலமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வாய்மொழிமூல பரீட்சையிலும் அது சித்தியடைந்துள்ளது.

நோய்க்கான தீர்வு, அதற்கான சிகிச்சைமுறை, மேலதிக பரிசோதனைகள், மருந்துகள் தொடர்பில் அது தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளது.

ரஸ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வளங்கப்படும் மருத்துவக் குறிப்புக்கள், பாடப்புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்ற தகவல்களை கடந்த 6 மாதமாக செயற்கை நுண்ணறிவுக்கு 42 கிகாபைற் ஞாபகசக்தியுள்ள கணணியில் பதிவேற்றி வடிவமைத்ததாக அதனை வடிவமைத்த கணணிப் பெறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தொழில்நுட்பம் பொதுமக்களின் பாவனைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும் என ரஸ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.