மருதனார்மட வர்த்தகர்களுக்கும் தவராஜா துவாரகனுக்கும்  இடையே   சந்திப்பு- மருதனார்மட கடைகளை திறப்பதற்கு மனு கையளிப்பு

மருதனார் மடத்தில் உள்ள கடைகளை திறப்பதற்கான உடனடி சாத்தியம் அல்ல எனவும் வர்த்தகர்கள் அனைவரதும் பி. சி. ஆர் நிறைவின் பின்னர் எதிர்வரும் கிழமை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான ஒத்துழைப்பை வர்த்தகர்கள் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருதனார்மடம் வர்த்தக சங்க பிரதிநிதிகள் இன்றைய தினம் தவராஜா துவாரகன் அவர்களை சந்தித்து மனு ஒன்றை கையளித்திருந்தனர்.

இன்றைய தினம் காலை பத்து மணியளவில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தவராஜா துவாரகன் அவர்களை சந்திப்பதற்காக ஒன்றுகூடிய போதும் வர்த்தக சங்க தலைவர், செயலாளர் பொருளாலர் மற்றும் மருதனார்மட வர்த்கசங்க ஆலோசனைக் குழு பிரதிநிதிகள் போன்றோருக்கு மாத்திரமே சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதன் போது வர்த்தகர்கள் தமது கடைத் தொகுதியில் உள்ள கடைகள் கடந்த 11:12:2020 அன்றிலிருந்து உடன் நடமுறைக்கு வரும் வகையில் அனைத்தும் பூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்து இதற்கமைவாக தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தாங்கள் பதின்நான்கு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து இரு தடவைகள் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதன் பெறுபேறுகள் சாதகமா கிடைக்கப்ப பெற்றதாகவும் மேலும் தமது கடைக்குள் காணப்படும் பொருட்கள் காலவதியாகுவதாகவும், பழுதடைவதாகவும் மேலும் கனமழை காரணமாக மழைநீர் உட்சென்றிருப்பதாலும் தமதும் தமது தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் இந்த காலப்பகுதி வியாபாரம் இடம்பெறும் காலப்பகுதி என்பதாலும் தாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கடைகளை திறப்பதற்கான அனுமதியை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது தவராஜா துவாரகன் தெரிவிக்கையில்,

பி.சி.ஆர் முடிவுகள் இன்றும் வரவேண்டி இருப்பதால் உடனடி சாத்தியம் அல்லாமல் எதிர்வரும் கிழமை திறப்பதற்கான அனுமதியை பெற்று தருவதாகவும் இது தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் கிழமை தீர்வைபெற்றுதருவதாகவும் உறுதியளித்தார்.

மேலும பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாதவர்கள் நாளைய தினம் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ள பரிசோதனையில் பரிசோதனையை மேற்கொண்டு திறப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறும் வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கடைகளைத் திறக்க அனுமதி கோரி மருதனார்மடம் வர்த்தகர்கள் துவாரகனிடம் மனு தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்படுவதால் உடனடிச் சாத்தியமில்லை என்கிறார் சுகாதாரப் பணிப்பாளர்