மனித உரிமை பேரவையில் இலங்கையின் சார்பில் பேசுவதற்கு 18 நாடுகள் இணக்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றுவதற்கு 18 நாடுகள் இணக்கம்தெரிவித்துள்ளதாக அரசசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மனிதஉரிமை பேரவையின் அமர்வின் போது இந்த நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதற்கு இணங்கியுள்ளன என்று அரசாங்கவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தொடர்பான  தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை முறியடிப்பதற்கான தீவிரபிரசாரத்தில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எனினும் இந்தியா இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், ஐ.நாவில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை எவ்வாறு ஐநாவின் பரிந்துரைகளை நிறைவேற்றியது என்பது குறித்த அறிக்கையை, மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார்.