மனிதர்கள் வாழ்ந்திராத தீவுக்கு இடமாற்றப்படும் ரோஹிங்கியா அகதிகள்

மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை வங்கதேச அரசு தொடர்ந்து இடமாற்றி வருகிறது.
முன்னதாக 1,600 அகதிகள் இடமாற்றப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 1,000 அகதிகள் இடமாற்றப்பட்டு வருகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தாழ்வான தீவுக்கு வங்கதேசம் மீண்டும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது புயல் அபாயம் உள்ள தீவு என்பதால் அகதிகளை இடம்மாற்றுவதற்கு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை மீறி வங்கதேசம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய முஸ்லீம் சிறுபான்மையினர்.

பாஷன் சார் என்பது 20 ஆண்டுகளுக்கு முன் கடலிலிருந்து தோன்றிய ஒரு தீவு.

அத்தீவிற்கு அகதிகளை இடம்மாற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறிய ஐக்கிய நாடுகள் சபை, எந்த அகதியையும் நிர்பந்தித்து பாஷன் சார் தீவுக்கு அனுப்ப வேண்டாம் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசம் கடற்படை 1,804 ரோஹிங்கியாக்களை ஐந்து கப்பல்களில் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அகதிகள் டெக்கில் மர பெஞ்சுகளில் அமர்ந்து, வாத்துகள்,புறாக்கள் மற்றும் கோழிகளை மூங்கில் கூடைகளில் கொண்டு சென்றுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசங்களை அணிந்திருந்தனர்.

மியான்மர் வன்முறையிலிருந்து தப்பிய 1642 ரோஹிங்கியாக்கள் (முதல் குழு) இந்த மாத தொடக்கத்தில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தனிமைப்படுத்தக்கட்ட தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

100,000 பேருக்கு வீட்டுவசதிகளுடன் தீவைப் பாதுகாப்பதற்காக அரசு 12 கி.மீ தூரத்திற்கு இரண்டு மீற்றர் உயர தடுப்பை கட்டியுள்ளனர். “இந்தத் தீவு முற்றிலும் பாதுகாப்பானது” என்று வெளியுறவு துறை அமைச்ச அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.

இடமாற்று நடவடிக்கை எதிர்ப்பை எதிர்கொண்டது. இது கடுமையான வானிலையை கொண்ட பகுதி என்பதால் உதவி குழுக்களிடமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. 1991ம் ஆண்டில், ஒரு 4.5 மீற்றர் (15-அடி) சூறாவளியின் காரணமாக சுமார் 143,000 பேர் அத்தீவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.