மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிமவளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன

மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோசங்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண் வளம் உள்ளிட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரங்கள் குறித்தும் அதனால் மட்டக்களப்பில் உள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட்லெகுன் கோட்டளில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் மிகுந்த சர்ச்சைக்குரிய மிகவும் இரகசியமான முறையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் உள்ள சில மாபியாக்களினால் மேற்கொள்ளப்படும் மணல்இகிரவல் வியாபாரங்கள் குறித்த தகவல்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இரகசியமான முறையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்காது மிகவும் திட்டமிட்ட முறையில்
நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல மண் மாபியாக்கள் கொழும்பில் இருந்து இயக்கப்படுவதால் அவர்களுக்கு அமைச்சுக்களின் செல்வாக்கு உண்டு.

இதனால் அவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் எந்த அரசாங்க அதிபர் வந்தாலும் தங்களது தொழிலை தங்கு தடையின்றி செய்து வருகின்றனர். தற்போது இவர்களை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கு உள்ளூர் பினாமிகளின் பெயரில் மண் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் மண் அனுமதி பத்திரம் பெற்றுள்ளனர்.

நீலாறு இ வள்ளியாறு பகுதியில் இருந்து காட்டுப்பாதை ஊடாக பொலனறுவைக்கு ஆற்று மணல் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது ஆற்று மணல் கிரவல் அனுமதி பத்திரம் வழங்குவதில் வனவளப்பரிபலன திணைக்களத்திற்கும் செங்கலடி பிரதேச செயலாளருக்கும் இடையில் நீயா நானா என்ற அதிகாரப் போட்டி நிலவுகிறது.

இதனிடையே மாவட்ட அரசாங்க அதிபர் செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இடையில் மண் அனுமதி பத்திரம் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்ட மோதல் எழுத்து மூலமாக அமைச்சு வரைக்கும் சென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று கொழும்பில் இருந்து வருகைதந்த புவிச்சரிதவியல் திணைக்களத்தின் தவிசாளர் மற்றும் மாவட்ட அரசாங்க திணைக்களத்தின் தலைவர்கள் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்களுக்கு இடையே நடந்த கூட்டம் மண் மாபியாக்கள் மூலம் இரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும்
மரக்கடத்தல்களுக்கு பாதுகாப்பு கவசமாக அரச அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர் செயற்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வளங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகிறது.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலும் மகிந்த ராஜபக்சக்களின் பிணாமிகளே அதிகாரம் செலுத்தியுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தாலோ அவர்களது பங்காளி கட்சிகளால் அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பிரதேச செயலக மட்டங்களில் நடைபெறும் ஊழல்களை தடுக்க முடியாது போயுள்ளது.

அதாவது தங்களுக்கோ தங்களது கட்சிக்கோ பதிப்பு ஏற்படுத்தாத அதிகாரிகள் என்னதான் ஊழல் செய்தாலும் அவர்களை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோசங்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண் வளம் உள்ளிட்ட புவிச்சரிதவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி பத்திரங்கள் குறித்தும் அதனால் மட்டக்களப்பில் உள்ள இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட்லெகுன் கோட்டளில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் மிகுந்த சர்ச்சைக்குரிய மிகவும் இரகசியமான முறையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலம் உள்ள சில மாபியாக்களினால் மேற்கொள்ளப்படும் மணல், கிரவல் வியாபாரங்கள் குறித்த தகவல்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இரகசியமான முறையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்காது மிகவும் திட்டமிட்ட முறையில் நடைபெற்றுள்ளது.