மட்டக்களப்பில் நேற்று மட்டும் 12 தொற்றாளர்கள் அடையாளம் – நகர் 3 நாட்களுக்கு முடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மதியம் வரையான 24 மணி நேரத்தில் 12 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்தார்.

கல்முனை தொடர்ந்துதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரில் உள்ள வர்த்தக நிலையங்களை மூன்று தினங்களுக்கு மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசமும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பொலிஸாரும் இராணுவத்தினரும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது. காத்தான்குடியின் இரு எல்லைப் பகுதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காத்தான்குடி பகுதியில் இருந்து வெளியேறுவோர் தொடர்பிலும் காத்தான்குடிக்குள் நுழைவோர் தொடர்பிலும் கண்காணிப்பட்டுகின்றன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,015பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத்தகவல்களைத் தெரிவித்தார்.

97 மட்டக்களப்பில் நேற்று மட்டும் 12 தொற்றாளர்கள் அடையாளம் - நகர் 3 நாட்களுக்கு முடக்கம்