மட்டக்களப்பில் தொடரும் ரபிட் அன்டிஜன் பரிசோதனை – தவிர்த்தால் சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு நகர் பகுதியில் தொடர்ந்தும் ரபிட் அன்டிஜன் பரீசோதனைகளை சுகாதார பகுதியினர் எழுந்தமானமாக மேற்க்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று காந்தி பூங்காவில் பொலிசார் மற்றும் பொதுமக்கள் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் என பலருக்கும் ரபிட் அன்டிஜன் பரீசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வருகின்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை பரீசோதனை செய்துகொள்வது கொரோனா தொற்றினை மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என சுகாதார பிரிவினர் மக்களை கேட்டுகொள்கின்றனர்.

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தாமதியாது உடணடியாக ரபிட் அன்டிஜன் பரீசோதனையினை செய்யவேண்டியது அவசியமாகும். அவ்வாறு அலட்சியம் செய்வோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் சுகாதாரத்துறையினருக்கு வழங்கும் ஆதரவிலும் ஒத்துழைபிலும்தான் கொரோனாவை நாட்டில் இருந்து ஒழிக்க முடியும். கண்டிப்பாக சுகாதார விதிகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ளது.