மட்டக்களப்பில் கன மழை – வெள்ளத்தில் மூழ்கும் பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

IMG 6642 மட்டக்களப்பில் கன மழை - வெள்ளத்தில் மூழ்கும் பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

IMG 6688 மட்டக்களப்பில் கன மழை - வெள்ளத்தில் மூழ்கும் பகுதிகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம்,புன்னைச்சோலை,இருதயபுரம்,கறுவப்பங்கேணி,பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

IMG 6651 மட்டக்களப்பில் கன மழை - வெள்ளத்தில் மூழ்கும் பகுதிகள்

பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதனால் பலர் தமது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது. இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

IMG 6607 மட்டக்களப்பில் கன மழை - வெள்ளத்தில் மூழ்கும் பகுதிகள்

போரதீவுப்பற்று இபட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.