மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு

உக்குளாங்குளம் மக்கள் குயிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு  தொடர்புபட்ட அதிகாரிகளை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
IMG c5937fbc985db89cce885791197753c0 V மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு
உக்குளாங்குளம் திருச்செந்தூரன் மில் வீதியில்  தொலைத் தொடர்பு கோபுரம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகின்றது.
IMG 80d31f0d1c9b3bd47291994190b7b435 V மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு
IMG 0ba2f2567c1f050933a6861785066b37 V மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு
இந்நிலையில் நகரசபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை எவையும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் படவில்லை. மக்களின் கருத்து அறியப்படவில்லை. குறிப்பாக அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அப்பகுதி மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.
IMG ef0be5431841a8765e233587dd11becc V மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு
IMG 42db4c1b4a81d2024610b9cf232470cd V மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம்- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு தனது உடனடி விசாரணைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் தொடர்புபட்ட துறை அதிகாரிகள் , கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றிற்கு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைகளுக்கு வருமாறு அறிவித்துள்ளது.