பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும்- பேராயர் மெல்கம்  ரஞ்சித்

பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்று பேராயர் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   கடந்த 30வருடங்களுக்கு முன்னர் தேவாலயம் ஒன்றில் நான் இருந்த தருணத்தில், பிரதி அமைச்சர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என கூறினார். நான்ஏ ன் என்று  கேட்டேன் . அதற்கு பிரிதி அமைச்சர் கூறினார். அரசியலில் தேவையான அளவு பணத்தை சம்பாதித்து விட்டேன் என்று. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.

 

கடந்த 30 வருடங்களுக்கு முன்னரும் இலங்கையில் இதுபோன்ற நிலைமைதான் காணப்பட்டது. தற்போது எனக்கு 70 வயதாகின்றது. எனது இளைஞர் பருவத்தில் இருந்து இவர் போன்றவர்களை பார்த்துக் கொண்டுதான் உள்ளேன். கொள்ளையர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை அரசியலமைப்பிலேயே மாற்ற வேண்டும்.

சரியாக நடக்க கூட முடியாதவர்கள் இளைஞர்களை மேலே வரவிடாமல், அவர்களது தாய் தந்தைக்கு சொந்தமானது போல பயன்படுத்துகிறார்கள். தனது எண்ணம் என்னவென்றால் பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்று பேராயர் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.