பொதுவேட்பாளரை அமைப்பு ஆதரிக்காததால் ரெலோ உறுப்பினர் பதவி விலகல்

ஜனாதிபதி தேர்தல் கடும் பௌத்த இனவாதி யார் என்பதை அறியும் ஒரு தேர்தல். ஆகவே பிரதான வேட்பாளர்கள் இருவராலும் எமக்கு ஒரு விதமான பிரியோசனமும் இல்லை. இப்போது தமிழர்கள் நாம் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் இதனால் ஒரு செய்தியை சர்வதேசத்திற்கு உரத்து கூற முடியும் என கூறிய கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ளாததனால் தான் ரெலோ அமைப்பில் இருந்து விலகுவதாக நிஷாந்தன் தெரிவித்துள்ளார் அவர் எழுதிய கடிதத்தின் முழு வடிவம் வருமாறு:

அனைத்து ஊடகம் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் அறிவித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நான் அங்கம் வகித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சிக்கும் என்னால் முன்மொழியப்பட்ட விடயமான இந்த ஜனாதிபதி தேர்தல் கடும் பௌத்த இனவாதி யார் என்பதை அறியும் ஒரு தேர்தல் ஆகவே பிரதான வேட்பாளர்கள் இருவராலும் எமக்கு ஒரு விதமான பிரியோசனமும் இல்லை.

ஆகவே இருவரில் ஒருவர் தான் ஜனாதிபதியாக வருப்போகின்றார்கள் ஒருவர் வந்தவுடன் மேற்கொண்டு அடுத்த நகர்வை நகர்த்தலாம். இப்போது தமிழர்கள் நாம் ஒரு பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் இதனால் ஒரு செய்தியை சர்வதேசத்திற்கு உரத்து கூற முடியும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடாக இறுதிவரை இருந்தது கூட்டமப்பில் உள்ள கட்சிகள் இதனை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆகவே ரெலோ இயக்கம் பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவாக இருந்த பொது வேட்பாளரை ஆதரிப்பது நல்லது என்னும் முடிவை ஜனநாயக முறைப்படி நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை ஓரளவேனும் இருந்தது உண்மை.

இருப்பினும் அன்றே நான் கூறினேன் இம்முறை ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காது விட்டால் நான் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்தும் விலகுவேன் என்று அதன் படி நான் தேர்தல் முடிந்த பிற்பாடு எனது பதவி விலகல் கடிதத்தை முறைப்படி கட்சியின் செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா அளர்களுக்கு முறைப்படி அனுப்பியுள்ளேன்.

நன்றி
என்றும் மக்கள் சேவையில் உள்ள
எஸ். நிஷாந்தன்