பொதுமக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்- சாணக்கியன்

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் பொறுப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 14000 பி.சி.ஆர் செய்து அதில் 2000தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 39பேர் மரணிக்கும் நிலையில்,  கட்டுபாடுகளை தளர்த்தி, இலங்கையில் வாழும் மக்கள் தொடர்பில் அக்கரையீனமாக செயற்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

IMG 20210628 WA0065 பொதுமக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்- சாணக்கியன்

தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் வழிகாட்டளில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை போக்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

இந்த இரத்ததான முகாமை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

IMG 20210628 WA0060 பொதுமக்கள் தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்- சாணக்கியன்

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கடந்த சில தினங்களாக இலங்கையில் பி.ஆ.ர் எடுக்கும் வீதத்தினை அரசாங்கம் குறைத்துள்ள போதிலும் தொற்றாளர்களின் தொகையும் இறப்பும் அதிகமாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்