பேச்சுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ரணில் அழைப்பு

எதிர்வரும் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் பேச்சுக்கு வருமாறு சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஆனால் ரணிலுடனான சந்திப்புக்கு முன்னர் தமது பாராளுமன்ற குழுவினரின் கலந்துரையாடல் உள்ளதாகவும், இன்று (17) மாலை 3 மணிக்கு அது இடம்பெறவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் கூட்டமைப்பின் ஆதவை சஜித் பிரேமதாசா முன்னர் கோரியிருந்ததாகவும், அவரின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தின் போது இது இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகளை பெறுவதற்கான வழியை தேடுமாறு ரணில் சஜித்திடம் கூறியிருந்தாதக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, சிறீலங்காவில் அரச தலைவர் ஆட்சி முறையை இல்லாது செய்யும் கட்சிக்கு தமது ஆதரவுகள் உண்டு என கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ சுமந்திரன் கொழும்பு நாளேடு ஒன்றிற்கு நேற்று (16) வழங்கிய கருத்தில் தெரிவித்துள்ளார்.