புதிதாக அச்சடிக்கப்பட்ட 74 பில்லியன் ரூபாய்கள் மாயம்?

சிறீலங்கா அரசு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக புதிதாக அச்சிடப்பட்ட 292 பில்லியன் ரூபாய்களில் 74 பில்லியன் ரூபாய்கள் மாயமாக மறைந்துள்ளதாக சிறீலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸா அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை மத்தியவங்கி 115 பில்லியன் ரூபாய்களை வைப்பிலிட்டுள்ளது. அவர்கள் 292 பில்லியன் ரூபாய்கள் அச்சிட்டுள்ளனர். இது சிறீலங்காவின் நாணய பெறுமதியை குறைத்துள்ளது.

வைப்பில் இடப்பட்ட பணத்துடன் சேர்த்து 218 பில்லியன் ரூபாய்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் மிகுதி 74 பில்லியன் ரூபாய்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. வேறு சில தேவைகளுக்கான அரசு அதனை பதுக்கியுள்ளது.

தேர்தல் காலம் என்பதால் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.