பிரித்தானிய பாராளுமன்றம் முடக்கம்;வெட்கக்கேடு என கூவிய எதிர்க்கட்சியினர்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய பிரதமரான போரீஸ் ஜோன்சன் , ஒப்பந்தமின்றி வெளியேறுவதில் குறியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக நாடாளுமன்றம் கடந்த 3ம் தேதி தொடங்கிய நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்க பிரதமர் போரீஸ் ஜோன்சன் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன்படி 2ம் வாரத்தில் இருந்து அக்டோபர் 14ம் தேதி வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக எம்பிக்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் தற்காலிக முடக்கப்பட்டது.

இன்று இந்த இந்த அவறிவிப்பு விடுக்கப்பட்டபோது எதிர்க்கடசி உறுப்பினர்கள் வெட்கக்கேடு எனக்கூறி தனது கடுமையன அதிருப்தியை வெளிக்காட்டினார்.