பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு, பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்டவற்றைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முக்கிய கட்டிடங்கள் தீக்கிரை ஆகின. மேலும், வணிக ஸ்தாபனங்கள் சூறையாடப்பட்டன.
தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 1.10 இலட்சம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போல நாடு முழுவதும் சுமார் 110 இடங்களில் மக்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



