பாலஸ்தீனத்தில் தூதரகத்தை திறப்பதற்கு தயாராகும் கொலம்பியா

03 3 பாலஸ்தீனத்தில் தூதரகத்தை திறப்பதற்கு தயாராகும் கொலம்பியாபாலஸ்தீனத்தின் ரமலா பகுதியில் தனது நாட்டின் தூதரகத்தை திறந்து அதில் அதிகாரிகளை பணியில் ஈடுபடவைப்பதே தனது அடுத்த திட்டம் எனவும் அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரை பணித்துள்ளதாகவும் கொலம்பியாவின் அரச தலைவர் கொஸ்ரோவ் பெற்ரோ கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் அங்கீகாரத்திற்கு கொலம்பியா ஆதரவு அளித்ததைப்போல பல நாடுகள் ஆதரவுகளை வழங்கலாம். இஸ்ரேலுடனான உறவுகளை நாம் முறித்துள்ளோம், அங்கிருந்த தூதுவர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம் நாளுடன் தூதரகம் மூடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த புதிய கொலம்பிய அதிபர் இஸ்ரேல்-பாலஸ்த்தீனப் போரின் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டடை எடுத்து வருகின்றார். லத்தீன் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக கடும்போக்குள்ள நாடாக அது உள்ளது.

இஸ்ரேலுடனான இரஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட முதலாவது லத்ததீன் அமெரிக்க நாடு கொலம்பியாவாகும். அதன் பின்னர் சிலி, பொலிவியா மற்றும் ஹொன்டூரஸ் ஆகிய நாடுகள் தமது தூதுவர்களை மீள அழைத்திருந்தன. இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா மேற்கொண்டுவரும் இனப்படுகொலை வழக்கில் இணைந்துகொள்ளவும் கொலம்பியா விருப்பம் தெரிவித்திருந்தது.

கடந்த புதன்கிழமை (22) நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.