பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கினார் ட்ரம்ப்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜோன் போல்டனை (John Bolton) நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜோன் போல்டனுக்கும் தமக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக ட்ரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பதவியிலிருந்து விலகுமாறு ஜோன் போல்டனை தாம் கேட்டுக்கொண்டதன் பின்னர், அவர் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த வாரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நபரொருவர் நியமிக்கப்படுவார் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், விருப்பத்தின் பேரிலேயே தாம் இராஜினாமா செய்ததாக ஜோன் போல்டன் அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜோன் போல்டன் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.