பாடசாலைக்கே செல்லமுடியாமல் வாழும் மலையக சிறுவர்கள்

மலையக தமிழ் சிறுவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்ந்தும் நெருக்கடியான நிலையிலேயே உள்ளதுடன், 26 விகிதமான சிறுவர்கள் பாடசாலைக்கே சென்றதில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

அங்கு வாழும் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அயலவர்களை நம்பமுடியாத சூழல் இருப்பாதாக 80 விகிதமானவாகள் தெரிவுத்துள்ளதுடன், 73 விகிதமான சிறுவர்கள் ஆரம்ப கல்வியுடன் தமது கல்விற் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது.

பதுளையில் 145 பாடசாலைகள் உள்ளபோதும், சில பாடசாலைகளிலேயே உயர்தர வகுப்புக்கள் உள்ளதாகவும், எனவே சிறுவர்கள் தமது கல்வியை ஆரம்ப கல்வியுடன் நிறுத்திவிடுவதாகவும் ஊவா சக்தி நிறுவனம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நடேசன் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்களும், சிறுவர்கள் கடத்தப்படுவதும் அதிகம் நிகழ்கின்றது. சிறுவர்களை தொழில்களுக்காக தரகர்கள் அழைத்துச் செல்வதும் வழமையாக இடம்பெறுகின்றது. தற்போதும் மக்கள் சிறு அறைகளில் தான் வாழ்கின்றனர். அங்கு வாழும் பெண்கள் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் நிலையில் உள்ள பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். அந்த குறைபாடுகள் அங்கு தற்போதும் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.