பாடசாலைகளில் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள்

அமெரிக்காவில் பாடசாலைகளில் இடம்பெறும் தூப்பாக்கி பிரயோகங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய கல்வி புள்ளிவிபர ஆவணம் தெரிவித்துள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை 188 ஆகும் அதில் 57 சம்பவங்களில் மரணங்கள் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னைய வருடம் 93 சம்பவங்கயே நிகழ்ந்திருந்தன.

US Shooting பாடசாலைகளில் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள்கடந்த 10 வருடங்களில் அங்கு இடம்பெறும் துப்பாக்கி பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அது சடுதியாக அதிகரித்து வருகின்றது.

அமெரிக்காவில் துப்பாக்கிகளை மக்கள் இலகுவாக கொள்வனவு செய்து பயன்படுத்த முடியும் என்ற சட்டம் உள்ளதால் அங்கு பொது இடங்கள் மற்றும் பாடசாலைகளில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொது அமைப்புக்கள் தொடாந்து தெரிவித்துவருகின்றபோதும், அமெரிக்க அரசு அந்த சட்டமூலத்தை மாற்றுவதை தவிர்த்து வருகின்றது. துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக அங்கு மக்கள் தொடாந்து குரல் எழுப்பி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.