பாகிஸ்த்தான் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவை வந்தடைந்தார்

பாகிஸ்த்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் சா முகமுட் குரேசி இரண்டு நாள் பயணமாக சிறீலங்காவுக்கு நேற்று (01) வந்துள்ளார்.

அவர் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் மற்றும் பிரதமரைச் சந்திப்பதுடன், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுக்களையும் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தொவிக்கின்றன.

மேலும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனாவைச் சந்திக்கும் பாகிஸ்த்தான அமைச்சர் இரு தரப்பு வர்த்தகம், அரசியல் மற்றும் படைத்துறை ஒத்துழைப்புக்கள் குறித்து ஆராய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவின் புதிய அரசு தென்னாசியப் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் இதன் மூலம் மேற்குலகத்துடன் ஒரு பேரம்பேசும் அரசியலை அது மேற்கொள்ள முனைவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.