பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தினால் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியா

வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

மன்றத்தின் தலைவர் மா. கதிர்காமராஜா தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகளின் முதல் நிகழ்வாக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு 8 மணியளவில் மலர்மாலை அணிவித்ததன் பின்னர் 9.30 மணிக்கு மன்றத்தின் உறுப்பினரான சு. ஜெயச்சந்திரனின் நிகழ்ச்சித்தொகுப்புடன் மண்பட நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது வரவேற்புரையினை மன்றத்தின் உறுப்பினர் சி. வரதராஜாவும் தலைமையுரையினை மன்றத்தின் தலைவர் மா. கதிர்காமராஜாவும் ஆற்றுவர்.

இதேவேளை சிறப்புரையினை ஜனாதிபதி சட்டத்தரணியும் மன்றத்தின் ஸ்தாபகருமான மு. சிற்றம்பலம் வழங்கவுள்ளதுடன் அதிபர் உரையினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர் தா. அமிர்தலிங்கமும் சிறப்பு வருந்தினர் உரைகளை வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் மு. இராதாகிருஸ்ணன் மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரனும் ஆற்றவுள்ளனர்.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ளும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி அ. புஸ்பநாதன் வழங்கவுள்ளதுடன் நன்றியுரையினை சங்கத்தின் உபதலைவர் செ. சந்திரகுமார் வழங்கவுள்ளார்.

இதன்போது 2019 ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரத்தில் வவுனியா மாவட்டத்தில் அனைத்து பாடத்திட்டத்திலும் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.