பக்தர்கள் இன்றியே கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறும்!

பக்தர்கள் இன்றியே  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  உற்சவம் இம்முறை நடைபெறவுள்ளது.

கச்சதீவு புனித்அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய  படகு ஒன்று நேற்றுக் காலையில் கச்சதீவை நோக்கிப் பயணித்துள்ளது.

கச்சதீவு புனித்அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த  உற்சவம் மார்ச் மாதம்  இடம்பெறவுள்ளது. இவ்வாறு இடம்பெறும் இந்த ஆண்டிற்கான உற்சவத்தில்  கோவிட் 19  காரணமாக இலங்கை – இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பங்குத் தந்தையர் பூசை வழிபாட்டில் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறு இடம்பெறும் பூசைக்கு  தேவையான பிற ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் நோக்கில்  படகு ஒன்று   நேற்றுக் காலையில் கச்சதீவை நோக்கிப் பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்தே பயணித்துள்ளது.

மார்ச் மாதம் இடம்பெற வேண்டிய கச்சதீவு உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என யாழ் மாவட்டச் செயலகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.