இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம், மலையக சமூகத்தின் வாழ்வுரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமகன் ஒருவரால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பொன்று, கறுப்பு ஆடை அணிந்த அடையாளம் தெரியாத குண்டர் குழுவினரால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் வெறும் சொத்துச் சேதமாக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. அது ஒரு சமூகத்தின் அடிப் படை வாழ்வுரிமை மீதான தாக்கமாகக் கருதப்படுகிறது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மலையக மக்கள், தங்களுக்கான நிலையான வீடமைப்பின்மை காரணமாக இத்தகைய தற்காலிக குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்த நிலைமையில் கூட அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்
பதற்கு இச்சம்பவம் சாட்சியமாக உள்ளது. இந்த தாக்குத லைத் தொடர்ந்து, நீலகாமம் பகுதி மக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் தலைவர்களும் இணை ந்து கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி “நீலகாமம் பிரகடனம்” என்ற ஒரு கூட்டறிக்கையை முன்மொழிந்துள்ளனர். இந்த பிரகடனம், மலையக மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யும் வகையில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிக ளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
மேலும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
நீலகாமம் பிடகடனம்
”இரத்தினபுரி மாவட்டம், காவத்தை நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பு மீது 22 ஏப்ரல் 2026 அன்று தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவமானது மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது டன் நாட்டுக்கான குடிமக்கள் என்ற வகையில் நமது இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறான தொழிலாளர் அடக்குமுறைகள் தோட்ட நிர்வாகங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. மலையக பெருந்தோட்டத் தொழி லாளர்களை அடிமைச் சமூகமாக எண்ணும் இத்தகையை மனப்பாங்குடைய நிர்வாகங்கள் எமது வளர்ச்சியை பல வீனப்படுத்தும் வகையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
நாட்டுக்காக உழைக்கும் தொழிலாளர்கள் என்ற வகையில் இவ்வாறான அடக்குமுறைகளையும் அராஜகங் களையும் தொடர்ச்சியாக தாங்கிக்கொண்டிருக்க முடியாது என்பதை மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறோம். அதனடிப்படையில் நீலகாமம் முதலாம் இலக்கப் பிரிவு தோட்டம் பெரட்டு மடுவம் வளாகத்தில் இன்று (26) கூடியுள்ள அனைவரும் ஒற்றுமையாக இணைந்து முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளதுடன் அதனை பிரகடனமாக வெளியிடுகிறோம்.
*பெருந்தோட்டத் தொழிலாளர்களையோ அல்லது பெருந் தோட்டங்களைச் சார்ந்திருக்கும் ஏனையோரையோ அச் சுறுத்துதல், அடக்குமுறைக்கு உட்படுத்தல் ஆகிய செயற் பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
*தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஊழியர்கள், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் ஆகி யோரை அழைத்து தாக்குதல்கள் மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
* தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு தோட்டங்களிலும் தொழிலா ளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படுதல் வேண்டும். அதில் தோட்டத் தலைவர்கள், ஆலய நிர்வாக சபையினர், சட்டத்தரணிகள், பிரதேச ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடக்கப்பட வேண்டும். அந்தக் குழுவுக்கான அதிகாரம், செயற்பாடுகள் குறித்து தீர்க்கமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும்.
*இந்தக் குழுவுக்கு மேலதிகமாக மாவட்ட ரீதியில் தொழி லாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கள் பெருந் தோட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கண் காணிப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும்.
*பெருந்தோட்ட தமிழ் சமூகத்துக்கான நில உரிமை பற்றி பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருகின்ற போதி லும் ஆட்சியை பொறுப்பேற்கும் ஒவ்வொரு அரசாங்கங்களும் பொறுப்புமிக்க வகையில் திட்டங்களை முன்னெடுக்க வில்லை. இருநூறு வருடங்களுக்கு மேலாக இந்த தேசத்துக்காக உழைக்கும் மக்களுக்கு முகவரியுடன் கூடிய காணியோடு வீடமைப்புத் திட்டம் அமைத்துக்கொடுத்தல் மிக அத்தியாவசியமான தேவையாகும்.
*அதற்காக தற்போதைய அரசாங்கம் துரிதமான நடவடிக்
கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்து கிறோம். வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கும்போது பாரபட்சம் பார்க்கப்படாமல் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற வேண்டும். அதற்காக சுயாதீனமாக இயங்கும் குழுவொன்றை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு உருவாக்க வேண்டும்.
*மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏதேனும் அசம் பாவிதங்கள், பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் கட்சி, பிரதேச வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் அனைத்து தமிழ் பேசும் தமிழ் அரசியல் தலைமைகளும் ஓரிடத்தில் கூடி ஆராய்ந்து ஒற்றுமையாக தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரகடனத்தை நீலகாமம் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாகிய நாம் இன்று (26) வெளி யிடுவதோடு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத் துத் தரப்பினரும் இணைய வேண்டும் என வலியுறுத்து கிறோம்”
இவ்வாறு குறித்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் குறித்த பிரகடனத்தை பாராளுமன்றில் முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மே 5ஆம் திகதி குறித்த பிரக டனத்தை சபையில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு பொதுமக்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பெருந் தோட்ட மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி பிரகடன த்தை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த கூட்டத்தில் ஆளும் தரப்பிலிருந்து எவரும் பங்கேற்க வில்லை என்ற விசனமும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரியைச் பிரதி நிதிப்படுத்தும் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் அரசியல்வாதிகள் பங்கு பற்றவில்லை.
இரத்தினபுரி மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர் இந்த நிகழ்வை புறக் கணித்திருந்தார். எவ்வாறாயினும் பிறிதொரு நாளில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நீலகாமம் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படை வேண்டாம் என்ற கோஷத்துடன் எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்கு தல், ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டும் கருதப்பட முடியாது. அது மலையக மக்களின் நீண்டகால புறக்கணிப்பின் வெளிப்பாடாகவும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் இன்னும் உறுதி செய்யப்படாததற்கான நினை வூட்டலாகவும் உள்ளது.
வீடமைப்பு, பாதுகாப்பு, நில உரிமை போன்ற அடிப்படை தேவைகள் இன்றும் தீர்க்கப்படாத நிலையில், இத்தகைய வன்முறைகள் நிகழ்வது சமூக நீதி மற்றும் சட்ட ஆட்சி பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. “நீலகாமம் பிரகடனம்” என்பது வெறும் கண்டன அறிக்கையாக இல்லாமல், ஒரு சமூகத்தின் கூட்டு குரலாகவும் உரிமைக் கான அழைப்பாகவும் பார்க்கப்பட வேண்டும். இது அரசாங் கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.
மலையக மக்களின் பிரச்சினைகளை இனி புறக்கணிக்க முடியாது என்பதற்கான எடுத்துக்காட்டாகும். அதேவேளை, இந்த பிரச்சினையில் அரசியல் வேறு பாடுகளை மீறிய ஒற்றுமை மிக அவசியமாக உள்ளது. ஆளும் தரப்பினரின் பங்கேற்பின்மை குறித்த விமர் சனங்கள், அரசியல் பொறுப்புணர்வு மற்றும் சமூக இணைப்பின் குறைபாடுகளைக் காட்டுகின்றன.
பின்னர் நடைபெற்ற சந்திப்பு ஒரு ஆரம்பமாக இருக்கலாம், ஆனால் அவை நடைமுறை தீர்வுகளாக மாற வேண்டும். எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள போராட் டங்கள், இந்தக் கோரிக்கைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயற்பாட்டு ரீதியாக மாற வேண்டும் என்பதற் கான அழுத்தமாக அமையும். இதன் மூலம், மலையக மக்க ளின் குரல் தேசிய மட்டத்தில் கேட்கப்பட்டு, நிலையான தீர்வுகள் நோக்கி நகர வேண்டும். நீலகாமம் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. இது போன்ற அநீதிகள் மீண்டும் நிகழாத படி உடனடி மற்றும் நீடித்த நடவடிக்கைகள் அவசியம். இல்லையெனில், சமூக அமைதி மற்றும் ஒற்றுமை மேலும் சிதைவடையும் அபாயம் நிலவுகிறது.



