நாற்பது வருடங்களின் பின்னர் முல்லை. மக்களின் சொந்தக் காணிகள் கிடைக்கவுள்ளன

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கொண்டைமடு என்னும் இடத்தில் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் சுமார் நாற்பத வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.

கடந்தகால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ஒரு பகுதியை வன இலாகா திணைக்களம் தமக்குரியது என கையகப்படுத்திய நிலையிலும் மக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாதிருந்தது. அத்துடன் அடர்ந்த காட்டுப் பகுதியூடாக செல்லவேண்டியிருப்பதாலும் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியிருந்தனர்.

இதேவேளை அரச நில அளவையாளர் கந்தையா அழகேந்திரன் மேற்கொண்ட கடும் முயற்சியால் அந்தப் பகுதி வயல் காணிகள் தற்போது அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த அளவீட்டுப் பணிகள் முடிவடைந்ததும் உரியவர்களுக்கு அந்தக் காணிகள் கையளிக்கப்படும். இதனால் காணிகளின் உரிமையாளர்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேர்தல் காலம் நெருங்கி வருவதால் முல்லைத்தீவு மக்களின் வாக்குகளை தமதாக்குவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மக்கள் கருதுகின்றனர்.