நவாலி இனப்படுகொலையை நினைவுகூர்வதற்கு சிறீலங்கா அரசு தடை

சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமரணதுங்காவின் ஆட்சிக்காலத்தில் சிறீலங்கா வான்படையினர் நவாலி கிராமத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரும் நிகழ்வை தடைசெய்வதற்கு சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் நாள் சிறீலங்கா வான்படையின் புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் நவாலி சென் பீற்றேஸ் தேவாலயத்தில் அடைக்கலம் கோரி தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டிருந்தன.

இதில் 165 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை இடம்பெறும் நினைவுகூரும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பொதுமக்களுக்கும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான எம். கே. சுpவாஜிலிங்கம் ஆகியோர் பங்குபற்றுவதை தடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றத்தில் சிறீலங்கா காவல்துறையினர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.