தேர்தல் காலத்து பதவி உயர்வுகள் – கோத்தாவின் புதிய முயற்சி

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறீலங்கா அரச தலைவர் படையினர் தரப்பில் அதிகளவான பதவி உயர்வகளை வழங்கிவருவது தேர்தல் விதிகளுக்கு முரணானது என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது மூத்த காவல்துறை அதிகாரிகள் பிரதி காவல்துறை மாஅதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள அதேசமயம், 71 இராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒரு தொகுதி இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு தொகுதி படையினருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இவைதவிர நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளின் பிரகாரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பதவி உயர்வகள் மற்றும் இடமாற்றங்கள் செய்யப்படுவது சட்டவிரேதமானதாகும்.

கோத்தபாய அரசு மிகவும் மோசமான ஊழல் நிறைந்த தேர்தல் ஒன்றை நடத்தி அதில் வெற்றிபெற முயன்றுவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.