தீர்மானத்திற்கு ஆதரவாக 40 நாடுகள் – 12 நாடுகளுக்கே வாக்களிக்கும் உரிமை

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக 40 நாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாடுகளில் பெருமளவானவை ஐரோப்பிய நாடுகளாகும், எனினும் அதில் உள்ள நாடுகளில் 12 நாடுகளே வாக்களிக்கும் உரிமை உள்ளவை. இந்த தீர்மானத்தில் கையொப்பமிட்டவுள்ள நாடுகளில் மார்சால் தீவுகள் மற்றும் மலாவி ஆகிய நாடுகளே மேற்குலகத்தை சாராத நாடுகள்.

இதனிடையே, இந்த தீர்மானத்தை முறியடிக்க உதவுமாறு பல நாடுகளின் தலைவர்களுக்கு சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தீர்மானத்தில் இருந்து முஸ்லீம் விவகாரத்தை அகற்றிவிட்டால் முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பின் ஆதரவை பெறமுடியும் என சிறீலங்கா மேற்கொண்ட முயற்சியை தீர்மானத்தை வரைந்த நாடுகள் முறியடித்துவிட்டன.