திலீபனின் நினைவு வாரத்தில் கடற்படையினருடன் தமிழ் ஊடகவியலாளர்கள் சுற்றுலா

தமிழ் ஊடகவியலாளர்களை திசை திருப்ப சிறீலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏதுவாக சிறீலங்கா கடற்படையினரின் வடக்கு பிராந்திய கட்டளை மையம் ஊடகவியலாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

வடபகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அழத்துக் கொண்டு தீவுப் பகுதிகளுக்கு கடல் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (20) இடம்பெறும் இந்த நிகழ்வில் தாம் ஒரு நாள் முழுவதும் நடுக்கடலில் சிறீலங்கா கடற்படையினரின் உபசரிப்பில் இருக்கப்போவதாக இதில் கலந்துகொள்ளும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை தன்வசப்படுத்தி அவர்களின் அரசியல் அபிலாசைகளை அழிக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு தற்போது ஊடகவியலாளர்களை குறிவைத்துள்ளதுடன், தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுக்கு தடைவித்துள்ள சிறீலங்கா அரசு தற்போது அவரின் நினைவு நாளில் ஊடகவியலாளர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.