திருகோணமலையில்  மேலும் சில பகுதிகள் முடக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும்   நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட  பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டி.ஜி.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.

 திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 53 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17, உப்புவெளி 19, மூதூர் 11, தம்பலகாமம் 6, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில்  53 கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,   அதிக தொற்று பரவல் நிலவும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் நோய் தோற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் முடக்க நிலை  மேலும் சில பகுதிகளுக்கு அறிவிக்கப்படக்கூடும் எனவும் டி.ஜி.எம்.கொஸ்தா  தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருகோணமலையில்  உவர்மலை, அன்புவழிபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகள்   முடக்கப்பட்டுள்ளன.