உலகம் முழுவதும் 15 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 இலட்சமாக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 15 கோடியே 27 ஆயிரத்து 88 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 32 இலட்சத்து 5 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்,

அமெரிக்கா – 3,31,46,008

இந்தியா – 1,91,64,969

பிரேசில் – 1,47,25,975

பிரான்ஸ் – 56,42,359

துருக்கி – 48,49,408