தலதா மாளிகை இணையத் தளம் மீது சைபர் தாக்குதல்; இரண்டு மணி நேரம் செயலிழந்தது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோக பூர்வ இணையத்தளம் மீது நேற்று மாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு மணிநேரம் குறித்த இணையத் தளம் செயலிழந்து காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள், இணையத்தளம் மீண்டும் இயங்கும்படிக்கு நடவடிக்கை எடுத்தனர்.