தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்! ஒற்றுமையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்!

சிறிலங்காவினால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் தமிழ் இனப்படுகொலை நடவடிக்கைகளின் கொடூரமான வடிவம் மே 2009 இல், முள்ளிவாய்க்கால் என்ற சிறிய நிலப் பரப்பில் உச்சம் தொட்டு உலகின் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றாக சில மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது.

இதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவு இலங்கையின் பல்லின மக்களிடையே மிகவும் ஆழமான விரிசலை ஏற்படுத்தி விட்டது. யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்காக அஞ்சலி செலுத்துவது தடுக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

70 ஆண்டுகளாக தொடரும் தமிழ் இனப்படுகொலையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். நீதி கிடைக்கும் வரை தலைமுறை தலைமுறையாக இந்தச் செய்தியை தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.

மே 18 அன்று உள்ளூர் நேரப்படி 18:18 மணிக்கு (18 – 18:18), இனப் படுகொலையில் இழந்த எம் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில் ஒற்றுமையுடன் எங்கள் வாழ்விடங்களில் எல்லாம் மெழுவர்த்திகளையோ அல்லது விளக்குகளையோ ஏற்றி வைப்போம்.

May 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்! ஒற்றுமையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்!

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நினைவில் பதித்துக் கொண்டு உயிர் இழந்த அனைவருக்கும் எங்கள் அஞ்சலிகளை செலுத்துவோம்.

தலைமுறைகளைக் கடந்து நீதிக்கான எம் பயணம் தொடரும்.

https://www.youtube.com/watch?v=bEZf17uDer8