மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியிருந்த அதேவேளை கைதுசெய்யப்பட்டதிலிருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான விசாரணைகளும் இல்லாமல் நீதிக்கு புறம்பாக சிறைகளில் அடைத்து வைத்திருப்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் மர்மமான முறையில் இறந்துவருவதையும் சுட்டிக்காட்டி இந்த இறப்புகள் தொடர்பாக தாங்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் மேலும் இறப்புகள் நிகழ சிறைச்சாலைத்துறையின் கவனயீனமே காரனமெனவும் கூறி அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் கோரியிருந்தனர்.


