அக்டோபர் 2001இல் இலங்கையில் செயற் பட்டுக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுதம் ஏந்திபோராடிய போராட்ட குழுக்கள் ஈழத் தமிழர்களின் அரசி யல் கட்சிகளாக மாற்றம் பெற்று இருந்த சூழலில், தமிழரின் அரசியல் பிரச்சினையை, ஈழத் தமிழர் பிரச்சனையை பலமிக்க குர லாக இலங்கை பாராளுமன்றத்திலும், பல வேறு உலக அமைப்புகளிடமும் எடுத்த செல்ல, விடுதலைப்புலிகள் ஆனையிறவு போரில் வெற்றி அடைந்து பலத்தின் உச்சமாக இருந்த சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, உருவாக்கப் பட்டது. அந்த நேரத்தில், இந்த கூட்டமைப்பை சரியான பாதையில் எடுத்து செல்வதற்கு ஒரு சில தமிழ் தேசிய உணர் வாளர்கள் இந்த கட்சியில் சேர்க் கப்பட்டார்கள், அவர்களும் தமிழ் மக்களின் Diplomats ஆக உலக வலம் வந்தார்கள்.
இந்த அரசியல் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மே 18 2009, போர் மௌனிக்க பட்ட நேரத்தில் இருந்து, தமக்கு தரப்பட்ட கடமையை மீறித் தடம் மாறினார்கள், தமிழருக்கான கரி நாள் நாளாகிய இலங்கைச் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4யில் சிங்க கொடியை ஏந்தி, வழி தவறிச் சென்றார்கள். அன்றில் இருந்து தமிழ் மக்களை பிரித்தாளும் செயலில், சிறிலங்கா அரசும், பல வல்லரசு நாடுகளில் அவர்களின் நலனுக்காக செயற்படுபவர்களாலும் கூட்டாக இருந்த தமிழர்களாகிய நாம் பிரிக்கப்பட்டோம்.
போர் முடிந்து 15 வருடங்கள் கடந்த நலையில் இன்று நாம் இருக்கும் நிலையில் என்ன என்பதை நாம் அலசி ஆராய வேண்டிய சூழலில் உள்ளோம். எமது விவசாய நிலங்கள், கடல் பிரதேசங்கள், எமது வாழ்விடங்கள் என எல்லா இடங்களிலும் எமது அடையாளங்கள் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கும் சூழலில், தமிழன் தொன்மையைக்காட்டி நிற்கும் சரித்திர ஆதாரங்களான பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிங்கள பெளத்த பாரம்பரிய பிரதேசம் என்று சிங்களம் எமது பிரதேசத்தை கபளீகரம் செய்து கொண்டு இருக்கின்றது. அப்படியான எந்தச் செயற்பாடுகளையும் தடுக்க முடியாத சூழ லில் நாம் இருக்கிறோம்.
இதற்கு முக்கிய காரணம், எங்கள் பலமாக, தமிழர் பலமாக இருக்க வேண்டிய எமது அரசியல் கட்சிகள், தமிழ் மக்களை பல பிரிவுகளாக்க பிரித்து வைத்திருக்கின்றது. தாயகத்தில் தொடர்ந்து தமிழருக்கு எதிராக நடைபெறும் இன, மத, கலாச்சார அழிப்புக்களை தடுக்க முடியாத சூழலில், தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதுடன், வாழ் வதற்காக தமிழ் தேசியத்தை கைவிடவும் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.
ஈழத் தமிழர் தமக்கான தீர்வுகள் எதுவுமற்ற சூழலில், எமது உரிமைகளை பாதுகாக்க, ஈழத் தமிழரை மீண்டும் மாபெரும் அணியாக ஒன்று திரட்ட வேண்டிய காலம் இதுவாக பார்க்கப்பட வேண்டும். கட்சிகளின் பிரிவுகளால் மக்கள் பிரிந்து நின்ற நேரத்தில் தாயகத்தில் இருந்து தமிழ் சிவில் அமைப்புகள் ஒன்று சேர்ந்தார்கள், மாற்றம் தேவை என்றார்கள். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை தமிழ் தேசியத்தினை மையமாகக் கொண்டு, கொள்கை கோட்பாட்டுக்காக 2021 எழுந்த தமிழ் மக்கள், மீண்டும் அப்படி எழ வேண்டிய நேரம் இது.
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களாகிய நாம் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தோம். தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை பிரிந்து தமது நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் சிவில் கட்டமைப்புகள் ஒன்று கூடி நிற்கின்றன.
2001 இன் பின், தமிழ் மக்கள் பேரவைக்கு பின், மீண்டும் தமிழ் மக்கள் சார்ந்த சிவில் சமூகங்கள் ஒன்று இணைகின்றன. எமது மக்களை ஒரு கூட்டுக்குள் – தமிழ் தேசியத்தை வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் ஒன்று இணைய வேண்டிய காலம். இதனையும் தவறவிட்டோமாக இருந்தால் – நாம் இழந்து கொண்டு இருக்கும் நிலத்தை, கடலை எங்கள் புராதன கலாச்சாரப் பிரதேசங்களை முற்று முழுதாக இழந்து சிங்கள பூமியில் இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாகும் நிலை ஏற்படும் நாள் வெகு தூரமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கால சூழலில் சிறி லங்காவிற்கான ஜனாதிபதி தேர் தலுக்கான திகதி அறிவிக்கப் பட்டுள்ளது .
இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு உரியது இல்லை. சிறிலங் காவின் ஒற்றை ஆட்சி தமிழ ருக்கு உரியது அல்ல. சிறிலங்காவின் யாப்பு தமிழருக்கு உரியது அல்ல. ஆனாலும் இந்த தேர்தலில் தமிழரின் ஒன்றிணைந்த குரல் ஒலிக்க வேண்டிய நேரம் இது. இந்த தேர்தலை தமிழர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை சிங்களமும் – சர்வதேசமும் புரிந்து கொள் வதற்கான மேடை இது.
கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்தி ஆக வேண்டும். தமிழ் பொது கட்டமைப்புக்குள் 7 அரசியல் கட்சிகள், 7 தமிழ் சிவில் அமைப்புகள் அதற்கு மேல் 83 தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. தமிழ் அரசியல் கட்சிகள் கட்சிகளுக்கு இது சவாலான காலம். மக்களுக்காக சரியாக செயற்படுகின்றனரா என்பதை அறிந்து கொள் வதற்கான நேரம் இது. இந்த சவாலான காலத்தில் நான் ஈழத் தமிழராக – தமிழ் பேசும் மக்களாக எமது அடை யாளத்தை உறுதி படுத்துவதற்கு – எமது உரிமையை வலியுறுத்தி நிற்க நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .தமிழர்களாகிய நாம் அனைவரும் திரு அரியநேத்திரன் என்ற ஒற்றையாட்சி எதிர்ப்ப அடையாளத்தின் பின் சங்கு சின்னத்துக்கு பெரும்
திரளாக வாக்குச் செலுத்தி, தமிழரின் ஒற்றுமை யையும் ஒன்றிணைவையும் சர்வதேசத்திற்கு தெரி விக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.



